பரீட்சைகள் நடத்தப்படும் தினம் அடுத்தவாரம் இறுதித் தீர்மானம்..!

Yarlosai - உயர்தர பரீட்சை நடைபெறும் ...
பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார். அதன்போது மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகுவதற்கான கால அவகாசத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கிணங்கவே அது தொடர்பில் தாம் அடுத்த வாரம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020