பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி


கொவிட் -19 தொற்று நிலைமையின் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போதைய நிலையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் கிருமி நீக்கம் செய்தல், நேர அட்டவணை தயாரித்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பல கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாம் கட்டத்தின் கீழ் தரம் 5,11 மற்றும் 13 ஆகிய ஆண்டு மாணவர்களுக்காக பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த வாரத்தினுள் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பராமரித்துச் செல்வதற்கு தேவையான சுற்றுச்சூழல் தயார்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.
Tags:- Schools, Re opens,July, Ministry , Eductio, Classes, Time table, Stages, Grade 5, O/L, Grade 13, A/L, Scholarship,Environment,Monday,Last wee,Ranjith, Santhirasekara, Secretary

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020