யாழ் பல்கலைகழக துணைவேந்தர் தெரிவு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 2 ம் திகதி இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின் ஊடாக மூன்று பேரில் இருந்து ஒருவரை, யாழ், பல்கலைக்கழக துணைவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Tags:- University of jaffna, Vice chancellor, selection,

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020