சுகாதார முறைப்படி மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள் - புகைப்படங்கள் இணைப்பு

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என, கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கிருமி தொற்று நீக்கி விசுறும் அணியினர் சகல பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி அததெரண
Tags:- Schools, Re-opens, Teachers, Principals




















Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020