உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கைளை கவனத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை நடத்தும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக இவ்வருடத்திற்குள் பாடசாலைகள் நடத்தப்பட்ட தினம் குறைவடைந்தமையினால் பாடத்திட்டங்களை நிவரத்தி செய்ய முடியாமல் போனதை அடுத்து உயர்தர பரீட்சை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவாலை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர்களினால் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment