2019 O/L மாணவர்களுக்கான அறிவித்தல்


உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.




இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத் தவறியமை கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது.

தாம் விரும்பும் பாடசாலையை தெரிவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது.

இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை உள்ளடக்கிய வகையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில் கல்வி கற்பிக்கப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 03 வரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

தரம் 3 - தமிழ் - உவர்மலை விவேகானந்தா கல்லூரி - முதலாம் தவணை

தரம் 5 - நுண்ணறிவு - புலமை வழிகாட்டி - செயலட்டை

தரம் 9 - விஞ்ஞானம் - சரஸ்வதி மத்திய கல்லூரி - பதுளை - செயலட்டை 2 - 2020